தேனி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 11,24,500 பேர்

தேனி, ஜன. 21: தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம்,  போடி,  கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் வெளியிட்டார்.

ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 1  லட்சத்து 36 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்கள்,  1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்கள், 34 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரியகுளம்

பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 45 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்கள்,  103 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்னர்.

போடி

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 050 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 41 ஆயிரத்து 893 பெண் வாக்காளர்கள்,  21 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.

கம்பம்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 619 ஆண் வாக்காளர்கள்,  1 லட்சத்து 45 ஆயிரத்து 918 பெண் வாக்காளர்கள், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து  85 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 826 ஆண் வாக்காளர்கள்,  5 லட்சத்து 72 ஆயிரத்து 479 பெண் வாக்காளர்கள்,  195 இதர வாக்காளர்கள் என  மொத்தம் 11 லட்சத்து  24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். இப்பட்டியல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்,   சார்ஆட்சியர்,  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்,   உதவி வாக்காளர் பதிவு அலுவலர்,   வட்டாட்சியர்,  நகராட்சி ஆணையர் அலுவலகங்கள்,  குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்னது.

வாக்காளர்கள் தங்கள் பெயர்  ரியான விபரங்களுடன் இடம் பெற்றுள்ளதா? என உறுதி செய்து கொள்ளலாம். மேலும்  01.01.2021ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 20.01.2021 முதல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் தொடர்  திருத்தத்தில் அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள்  மூலமாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,  வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அனைவரும் பெயர் சேர்த்தலுக்கான படிவம் 6,   பெயர் நீக்கலுக்கான படிவம் 7,  விபரம் திருத்துதலுக்கான படிவம் 8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தலுக்கான படிவம் 8  ஆகிய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

Related Stories:

>