ஒலையூரில் வேளாண்துறை சார்பில் கழிவுப் பொருளை மக்க வைக்கும் காரணி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

ஜெயங்கொண்டம், ஜன.21: ஆண்டிமடம் அருகே ஒலையூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் கழிவுப் பொருளை மக்க வைக்கும் காரணி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டிமடம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் ஓலையூர் மற்றும் குளத்தூர் கிராமங்களில் உளுந்து மற்றும் மக்காச்சோள பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் கீரிட் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் விதை முதல் அறுவடை வரை பின்பற்றவேண்டிய முக்கிய தொழில்நுட்பங்களான கோடை உழவு ,கழிவுப் பொருளை மக்க வைக்கும் காரணி உபயோகித்தல், விதை நேர்த்தி ,ஊடுபயிர் சாகுபடி ,நுண்சத்து மேலாண்மை , பயிர் பாதுகாப்பு முறைகளில் மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி , இனக்கவர்ச்சிப் பொறி, பறவைத் தாங்கிகள் உபயோகித்தல் குறித்தும் , தேமோர் கரைசல் மற்றும் பஞ்சகாவியா தயாரிப்பு முறைகள் குறித்தும் எடுத்து கூறினார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி செய்திருந்தார்.

Related Stories: