லாரி மோதி முதியவர் பலி

சின்னமனூர், ஜன. 21: சின்னமனூர் அருகே முத்துலாபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ராசு (60). இவர் உத்தமபாளையம் சாலையில் உள்ள சிமெண்ட் கடையில் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை இரவு வேலைக்காக, தனது தம்பி மகன் ரஞ்சித்துடன் (36) டூவீலரில் முத்துலாபுரம் பிரிவு வந்து சாலையி–்ல் நடந்து சென்றார். அப்போது தேனி நோக்கி சென்ற லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>