பெரம்பலூரில் சாலைபாதுகாப்பு மாத விழா ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அசத்தல்

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூரில் போக்குவரத்து காவல்துறை சார்பாக சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜிலேபி, கேக் வழங் கிய போக்குவரத்து போலீசார் அசத்தினர். பெரம்பலூரில் நேற்று போக்குவரத்துக் காவல்துறை சார்பாக, சாலைப் பாதுகா ப்பு மாதவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில், போலீசார் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் காத்திருந்த போக்குவரத்து (நெடுஞ்சாலை) இன்ஸ்பெக்டர் கோபிநாத், எஸ்ஐ சக்திவேல் உள்ளிட்ட போ லீசார், வழக்கம்போல் வாகனத் தணிக்கையில் ஈடுப ட்டனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராத நிலையில், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களையே வழிமறித்து நிறுத்தினர். சிறிதுநேரத்தில் அவர் கள் எதிர்பாராத நிலையி ல், பெரம்பலூர் டிஎஸ்பி (சட் டம் ஒழுங்கு) சரவணன் சாலைப் போக்கு வரத்து விதிகளை மதித்து, மறக்கா மல் ஹெல்மெட் அணிந்து வந்த தற்காக உங்களுக்கு ப் பாராட்டு தெரிவிக்கிறோ ம் எனக்கூறி, ஹெல்மெட் அணிந்துவந்த அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிக ளுக்கும் ஜிலேபி மற்றும் கேக்குகளை வழங்கினார்.அதே நேரம்ஹெல்மெட் அணியாம ல் வந்த 30பேருக்கு அப ராதம் விதித்தனர்.

Related Stories: