காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.21: பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக காலமுறை ஊதி யம் வழங்கக் கோரி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நேற்று மாலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கிட வேண்டும்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர்களுக்கு முறையான, வரையறுக்கப் பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் ஓய்வு பெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ 10 லட் சமும் உதவியாளர்களுக்கு ரூ 5 லட்சமும் வழங்கவேண் டும்என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழரசி, மாவட்ட துணை செயலாளர் சக்தி ஆகி யோர் முன்னிலை வகித் தனர். சிஐடியூ பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அகஸ்டின், அங்கன்வாடி மாநில துணைத்தலைவர் அரிய லூர் மணிமேகலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் அரியலூர் துரைசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.

Related Stories: