காரைக்கால் மருத்துவர்கள் கருத்து வேதாமிர்த ஏரியில் 25,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன. 21: வேதாரண்யம் வேதாமிர்த ஏரி 17 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரி தற்போது தூர் வாரப்பட்டுள்ளது. ரூ.9 கோடி செலவில் ஏரியின் நான்குபுறமும் சுற்றுச்சுவர் அமைத்து பூங்கா மற்றும் நடைப்பயிற்சிக்கான தளம் உள்ளிட்ட அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஏரியின் மைய பகுதியில் நந்தி மண்டபம் அமைக்கப்படவுள்ளது. இந்த நந்தி மண்டபம் 27 அடி உயரத்தில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்படவுள்ளது. இதற்கான பணி நடந்து வருகிறது. இந்த ஏரியில் நேற்று மீன்த்துறையினர் சார்பில் 25,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன் தலைமையேற்று மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திலீபன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன், கூட்டுறவு சங்க தலைவர் நமச்சிவாயம், வேதாரண்யம் நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.

Related Stories:

>