காரைக்கால் மாவட்டத்தில் 1.61 லட்சம் வாக்காளர்கள்

காரைக்கால், ஜன. 21: காரைக்காலில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டத்தில் 1.61 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அர்ஜுன் சர்மா வெளியிட்டார். அதில் காரைக்கால் மாவட்டத்தில் 74,739 ஆண் வாக்காளர், 86,705 பெண் வாக்காளர் என மொத்தமாக 1,61,464 பேர் வாக்காளர்கள் உள்ளனர். நெடுங்காடு (தனி) தொகுதியில் 14,122 ஆண் வாக்காளர், 16,351 பெண் வாக்காளர், திருநள்ளாறு தொகுதியில் 13,727 ஆண் வாக்காளர், 16,383 பெண் வாக்காளர்கள் உள்ளனர். காரைக்கால் வடக்கு தொகுதியில் 16,165 ஆண் வாக்காளர், 18,447 பெண் வாக்காளர்கள் உள்ளனர். காரைக்கால் தெற்கில் 14,247 ஆண் வாக்காளர், 16,564 பெண் வாக்காளர்கள் உள்ளனர். நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் 14,147 ஆண் வாக்காளர், 16,359 பெண் வாக்காளர்கள் உள்ளனர். நெடுங்காட்டில் 2 பேர், காரைக்கால் வடக்கில்17 பேர், காரைக்கால் தெற்கில் ஒருவர் என 20 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories:

>