இறுதி பட்டியல் வெளியீடு நாகை, மயிலாடுதுறையில் 13.41 லட்சம் வாக்காளர்கள்

நாகை, ஜன. 21: நாகை, மயிலாடுதுறை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 2 மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 13.41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 12,149 பேர் நீக்கம் செய்யப்பட்டு 48,701 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது கலெக்டர் பிரவீன்பிநாயர் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நாகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதன்படி நாகை மாவட்டத்தில் 1,511 வாக்குச்சாவடிகள் உள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6,58,437, பெண் வாக்காளர்கள் 6,82,815, மூன்றாம் பாலினத்தவர் 53 என மாவட்டம் முழுவதும் 13,41,305 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 48,701 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 12,149 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்புவோர் தொடர்ந்து உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் அல்லது இணையதள மூலமும் பதிவு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியலில் நாகை சட்டமன்ற தொகுதியில் 95,598 ஆண் வாக்காளர், 1,07,748 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் உள்ளனர். சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,23,899 ஆண் வாக்காளர், 1,27,868 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் உள்ளனர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,21,166 ஆண் வாக்காளர், 1,23,841 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் உள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,35,862 ஆண் வாக்காளர், 1,39,713 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் உள்ளனர். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 87,677 ஆண் வாக்காளர், 91,578 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் உள்ளனர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 94,275 ஆண் வாக்காளர், 98,067 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதியில் 6,58,437 ஆண் வாக்காளர்கள், 6,82,815 பெண் வாக்காளர், மூன்றாம் பாலினத்தவர் 53 என மொத்தம் 13,41,305 வாக்காளர் உள்ளனர் என்றார். டிஆர்ஓ இந்துமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஆர்டிஓ பழனிகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>