நேபாளத்தில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் வேதாரண்யம் வீரர் முதலிடம்

வேதாரண்யம், ஜன. 21: வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்த வாலிபர் வசிஷ்ட் விக்னேஷ். இவர் கடந்த 18ம் தேதி இன்டர்நேஷனல் யூத் ரூரல் கேம்ஸ்- ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நேபாளத்தில் நடந்த 7வது இந்தோ- நேபால் யூத் ரூரல் கேம்ஸ் 2020ல் இந்தியா சார்பில் பங்கேற்று நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மேலும் இவர் கடந்த 2019ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த 6வது இந்தோ நேபால் யூத் கேம்ஸ்- ஸ்போர்ட்ஸில் பங்கேற்று நீளம் தாண்டுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகள் மூலம் ஆசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

Related Stories:

>