இறுதி பட்டியல் வெளியீடு 14,482 வாக்காளர்கள் நீக்கம்

சிவகங்கை, ஜன.21: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 11லட்சத்து 81ஆயிரத்து 877வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 6லட்சத்து ஆயிரத்து 82, ஆண்கள் 5லட்சத்து 80ஆயிரத்து 722, பிற பாலினத்தவர் 73 நபர்கள் ஆவர். ஆண்களை விட 20ஆயிரத்து 360 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் காரைக்குடி தொகுதி 1லட்சத்து 54ஆயிரத்து 905ஆண், 1 லட்சத்து 60ஆயிரத்து 399பெண், பிற பாலினத்தவர் 47உட்பட மொத்தம் 3லட்சத்து 15ஆயிரத்து 351வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக உள்ளது.

குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக மானாமதுரை(தனி) தொகுதி உள்ளது. இங்கு 1லட்சத்து 36ஆயிரத்து 397ஆண், 1லட்சத்து 40ஆயிரத்து 354பெண், பிற பாலினத்தவர் 10பேர் உள்பட மொத்தம் 2லட்சத்து 76ஆயிரத்து 761வாக்காளர்கள் உள்ளனர். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 42ஆயிரத்து 327ஆண், 1லட்சத்து 48ஆயிரத்து 308பெண், பிற பாலினத்தவர் 12உள்பட மொத்தம் 2லட்சத்து 90ஆயிரத்து 647வாக்காளர்கள் உள்ளனர். சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 1லட்சத்து 47ஆயிரத்து 93ஆண், 1 லட்சத்து 52ஆயிரத்து 21பெண், பிற பாலினத்தவர் 4பேர் உள்பட மொத்தம் 2லட்சத்து 99ஆயிரத்து 118வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 7ஆயிரத்து 648ஆண், 6ஆயிரத்து 829பெண் உட்பட, பிற பாலினத்தவர் 5பேர் உட்பட 14ஆயிரத்து 482வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக திருப்பத்தூர் தொகுதியில் 8ஆயிரத்து 430வாக்காளர்களும், காரைக்குடி தொகுதியில் 4ஆயிரத்து 614வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களாக 17ஆயிரத்து 689ஆண், 20ஆயிரத்து 581பெண், பிற பாலினத்தவர் 16பேர் உட்பட மொத்தம் 38ஆயிரத்து 286பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளாக மொத்தம் ஆயிரத்து 348 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன், டிஆர்ஓ லதா, ஆர்டிஓக்கள் முத்துக்கலுவன், சுரேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, தாசில்தார்(தேர்தல்) கந்தசாமி, மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசில் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: