பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் பிப்.5க்கு தள்ளிவைப்பு

திருப்புத்தூர், ஜன.21: திருப்புத்தூர் பஸ் நிலைய கடை ஏலம் நேற்று மாலை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம் தற்போது புதிதாக கட்டப்பட்டு கடந்த டிச. 4ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைகள், ஓட்டல் மற்றும் டூவீலர் ஸ்டாண்ட் இவைகளுக்கான ஏலம் கடந்த ஜன. 7ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று வர்த்தகர்கள் ஏலம் எடுப்பதற்காக, டிடி கட்டுவதற்காக பேரூராட்சி அலுவலகம் வந்திருந்தனர். காலை முதலே நூற்றுக்கணக்கானோர் டிடி கட்டியுள்ளனர். பின்னர் நேற்று மாலை நிர்வாக காரணமாக ஏலம் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறியதால் அலுவலகம் முன்பு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பிப். 5ம் தேதி ஏலம் நடத்தப்படும் என்று அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனால் மாலை 5.10 மணியுடன் டி.டி வாங்குவதை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து டி.டி கொடுக்க காத்திருந்த 40க்கும் மேற்பட்டவர்கள் சத்தம் போட்டதால், பின்னர் அவர்களுடைய டி.டி.யையும் பேரூராட்சி அலுவலர்கள் வாங்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: