கே,எஸ்.அழகிரிபேட்டி கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்திருந்த கைகழுவும் இயந்திரம் சீரமைக்க வேண்டும்

கரூர், ஜன. 21: கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைகழுவும் இயந்திரங்களை சீரமைத்து திரும்பவும் பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கொரனோ பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வரும் பொதுமக்கள் கைகளை கழுவி செல்லும் வகையில் அதற்கான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இதே போல், கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியிலும் இதுபோன்ற கருவிகள் வைக்கப்பட்டு சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது அவை பயன்பாடின்றி மிகவும் மோசமான நிலைக்கு சென்றதால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது வரை கொரனோ பரவல் பீதி குறையவில்லை. மேலும், உருமாறிய கொரனோ பீதியும் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கருவிகளை திரும்பவும் சீரமைத்து பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: