இறுதி பட்டியல் வெளியீடு கரூர் மாவட்டத்தில் 8,96,713 வாக்காளர்கள்

கரூர், ஜன. 21: கரூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி நான்கு தொகுதிகளிலும் 8லட்சத்து 96ஆயிரத்து 713 வாக்காளர்கள் உள்ளனர்.புதிதாக 35,111 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் 2021ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டார். தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களான நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடஙங்கள் ஆகியவற்றிலும் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியிலின்படி, அரவக்குறிச்சி ஆண் வாக்காளர்கள் 1,01,902, பெண் வாக்காளர்கள் 1,11,201, இதர வாக்காளர்கள் 7 என 2,13,110பேர் உள்ளனர். கரூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,15,834, பெண் வாக்காளர்கள் 1,28,321, இதர 19 என 2,44,174 பேர் உள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் (தனி) ஆண் வாக்காளர்கள் 1,03,736, பெண் வாக்காளர்கள் 1,08,865, இதர 43 என 2,12,644 பேர் உள்ளனர். குளித்தலையில் ஆண் வாக்காளர்கள் 1,10,462, பெண் வாக்காளர்கள் 1,16,312, இதர 11 என 2,26,785 பேர் உள்ளனர். இதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காள ர்கள் 4,31,934, பெண் வாக்காளர்கள் 4,64,699, இதர வாக்காளர்கள் 80பேர் என மொத்தம் 8,96,713 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம்தேதி அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் 68 இதர வாக்காளர்கள் உட்பட 8,79,082 இருந்தனர்.

இதன்படி, தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 17,661 கூடுதலாக உள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியிலில் 35,111 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 17,480 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில், அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வளிக்கும் வகையில, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை 1950 என்ற எண்ணை அழைத்து தொடர்பு கொள்ளலாம். வெளியூரில் இருந்து தொடர்பு கொள்ள நேர்ந்தால் 04324&1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொது சேவை மையங்களிலும் மனுக்களை பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>