பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

பரமக்குடி, ஜன.21:   பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான திறனாய்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரைச் செல்வி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகர் முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா, ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் உள்பட பரமக்குடி ஊராட்சி  ஒன்றியத்துக்கு  உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>