ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.21:  ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சா புழக்கத்தால் மாணவர்கள் உள்ளிட்ட இளம் தலைமுறையினர் அடிமையாகி வருகின்றனர். இதனை அடியோடு ஒழித்து சீரழியும் இளைஞர்களை சீர்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சத்தினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் பல மாதங்களாக மாணவர்கள் விடுமுறையில் வீடுகளில் இருந்தனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்களால் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்தே இந்த கஞ்சா விற்பனை கும்பல் செயல்படுவதால், அதிகளவில் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். ஒரு சில பகுதியில் கஞ்சாவிற்கு அடிமையாகியவர்கள் மற்ற மாணவர்களையும், இளைஞர்களையும் இதற்கு அடிமையாக்கி வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பூவாணிப்பேட்டை, கீழக்கோட்டை, கோழியார்கோட்டை,  பரம்பைரோடு உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே சம்மந்தப்பட்ட போலீசார் கஞ்சா விற்பனையில்

ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இளைய தலைமுறையினரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: