நெல்லை - ஆலங்குளம் சாலையில் பேட்ஜ் ஒர்க் பணிகள் துவக்கம்

நெல்லை, ஜன. 21:  நெல்லை- ஆலங்குளம் இடையே நெடுஞ்சாலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் நேற்று ெதாடங்கியது. நெல்லை மாநகர பகுதியிலும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் சாலையும் மோசமாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி, எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக தெரிகின்றன. ஆலங்குளம் சாலையில் மேடு பள்ளங்களில் வாகனங்கள் துள்ளி குதித்து செல்வதால், ரப்பர் சாலை  என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.  இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர், அச்சாலையில் பள்ளமான பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர். பழையபேட்டை செக்போஸ்ட் தொடங்கி மாறாந்தை வரை 14 கிமீ தூரத்திற்கு இப்பணிகள் நடக்கவுள்ளன. நேற்று இப்பணிகள் தொடங்கிய நிலையில் முதலில் பள்ளம் விழுந்த இடங்களை நிரப்பிவிட்டு, அதை தொடர்ந்து தார் போடும் பணிகள் நடக்க உள்ளன.

வருகிற 29ம் ேததி நெல்லை- தென்காசி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. எனவே தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேட்ஜ் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை மாநகரை பொறுத்தவரை டவுன் பகுதி சாலைகள், தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கவும், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அப்பணிகள் நிறைவு பெற்ற பின்னர் நெடுஞ்சாலைத்துறை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories:

>