சுரண்டையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

சுரண்டை, ஜன. 21:  திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சுரண்டையில் நடந்தது. சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பழனி நாடார் முன்னிலை வகித்தார். இதில் டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளை ஆதரித்து தென்காசியில் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு இருசக்கர பேரணி நடத்துவது. அதாவது தென்காசி ஆசாத் நகரில் இருந்து புது பஸ் நிலையம் வரை நடைபெறும் இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோரை தேசியக் கொடியுடன் மட்டுமே  பங்கேற்கச் செய்வது. பேரணி நிறைவில் தேசிய கொடி ஏற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் திமுக சார்பில் கலை இலக்கிய பேரவை எழில்வாணன், ஒன்றியச் செயலாளர் சீனித்துரை, ஜெகதீசன், சுரண்டை பேரூர் செயலாளர் ஜெயபாலன், காங்கிரஸ் சார்பில் சுரண்டை நகரத் தலைவர் ஜெயபால், மாநில பேச்சாளர் பால்துரை, செல்வம்,பிரபு, மதிமுக  நிர்வாகிகள் ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், துரைமுருகன், முத்துபாண்டியன், வக்கீல் சுப்பையா, ஆறுமுகச்சாமி, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் குணசீலன், தங்கம், வேலுமயில், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இசக்கி துரை, ஐயப்பன், பரமசிவம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் இக்பால், முகமது அலி, விசிக மணி, மமக  ஷாஜகான், சாகுல் ஹமீது, ஆதித்தமிழர் பேரவை கலிவருணன், அசோக், தென்னரசு, சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் லூர்து நாடார், ஜெயராஜ், அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள் தங்கபாண்டியன், முத்துபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி கணேசன், முருகன், மக்கள் விடுதலை கட்சி சார்லஸ் குமார், சக்திவேல், ராஜஇளங்கோ, முருகையா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>