சுரண்டையில் தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

சுரண்டை, ஜன. 21:  சுரண்டையில் தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடந்தது. நெசவாளர் அணி மாநில செயலாளர் கோதை மாரியப்பன் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல், மாவட்ட அவைத்தலைவர் முத்துக்குமார், சுரண்டை பேரூர் அவைத்தலைவர் சமுத்திரகனி முன்னிலை வகித்தனர். சுரண்டை நகரச் செயலாளர் கருப்பு நிலா கணேசன் வரவேற்றார். இதையடுத்து இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நடிகர் ராஜேந்திரநாத், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் கனகராஜ், சுரண்டை நகர பொருளாளர் ராமச்சந்திரன், கீழப்பாவூர் ஒன்றியச் செயலாளர் உதயகுமார், விவசாய அணி மாவட்டச் செயலாளர் சாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, மாலதி, இளைஞர் அணி மாவட்ட துணைச்செயலாளர் தர்மலிங்கம், சுரண்டை நகர முன்னாள் செயலாளர் சேர்மன், மகளிர் அணி ஜெயா, சரண்யா, ஆனைகுளம் ஊராட்சி செயலாளர் தங்கதுரை, கற்பகராஜ், சுரேஷ், விஜயன், செந்தில்குமார் திருமலைக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>