ராதாபுரம் தொகுதியில் புதிய சாலைகள் அமைப்பு பணி இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார்

பணகுடி, ஜன.21:  ராதாபுரம் தொகுதி, கூடங்குளம் 4 வழிச்சாலை சந்திப்பு முதல் ராதாபுரம் வரை ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை  இன்பதுரை  எம்எல்ஏ துவக்கிவைத்தார்.

இதேபோல் கொத்தங்குளம் முதல் அரசர்குளம் வரை ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகளையும் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். நிகழ்ச்சிகளில் அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அந்தோனி அமல்ராஜா, விஜயாபதி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய பொருளாளர்  துரைசாமி, ஜெ. பேரவை செயலாளர் சாமுவேல், நிர்வாகிகள் கபாலி, தமிழ்செல்வம், லிங்கதுரை , சுமித், மணிகண்டன், வினேஸ்ராஜா மணிகண்டன், அம்பிகாபதி, நாராயணன் பங்கேற்றனர்.

Related Stories:

>