மறைந்த முன்னாள் எம்பி அக்கினிராசு உருவப்படத்தை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருப்பரங்குன்றம், ஜன.21: மறைந்த முன்னாள் எம்பி அக்கினிராசு உருவப்படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருப்பரங்குன்றம் அருகில் திருநகரில் முன்னாள் எம்பி அக்கினிராசு இல்லம் உள்ளது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அக்கினிராசு கடந்த நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வர இயலவில்லை. நேற்று தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அக்கினிராசு உருவ படத்தை அவரது இல்லத்தில் திறந்து வைப்பதாக இருந்தது.

விமானத்திற்கு தாமதமானதால் சென்னை சென்றடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காணொளி காட்சி மூலம் அக்கினிராசு உருவ படத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இருப்பதால் விமானத்தை பிடிக்க வேண்டி என்னால் நேரடியாக வர இயலவில்லை. அடுத்த முறை மதுரை வரும்போது நேரடியாக வருவதாக கூறினார். மேலும், குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன், பகுதி செயலாளர் உசிலை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அக்கினிராசின் மகன் கருணாநிதி நன்றி தெரிவித்தார்.

Related Stories: