தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 14,81,799 வாக்காளர்கள் இறுதிபட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

தூத்துக்குடி, ஜன.21: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில் மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டிலை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் 1,38,879 ஆண்கள், 1,45,232 பெண்கள், 53 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,84,164 வாக்காளர்களும், விளாத்திகுளம் தொகுதியில் 1,55,048 ஆண்கள், 1,99,091 பெண்கள், 4மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,15,543 வாக்காளர்களும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் 1,18,069ஆண்கள், 1,25,268 பெண்கள், 38மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,43,375 வாக்காளர்களும், வைகுண்டம் தொகுதியில் 1,10,132 ஆண்கள், 1,13,622 பெண்கள், 10 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,23,764 வாக்காளர்களும் உள்ளனர்.ஓட்டப்பிடாரம் தொகுதியில் 1,22,372 ஆண்கள், 1,27,653 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,50,053 வாக்காளர்களும், கோவில்பட்டி தொகுதியில் 1,29,484 ஆண்கள், 1,35,385 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2,64,900 வாக்காளர்களும் உள்ளனர்.மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் 7,24,484 ஆண்களும், 7,57,151 பெண்களும், 164 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 14,81,799 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்திலுள்ள 870 வாக்குச்சாவடி மையங்களில் 1,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் கலெக்டர் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது, 54,211 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 965 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 53,246 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. பெயர் நீக்க பெறப்பட்ட 16,634 விண்ணப்பங்களில், 755நிராகரித்து, 15,879 ஏற்கப்பட்டது. இதுவரை பெயர் சேர்க்கப்படாத, 1.1.2021 அன்று 18வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5மணி தங்களுக்குரிய தாலுகா அலுவலகங்களில் தேர்தல் அலுவலரிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம்.மேலும், செல்போன், கணினியில் www.nvsp.inஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் விண்ணப்பிக்கலாம்.புதிதாக பெயர் சேர்க்க இணையதளத்தில் படிவம் 6ல் தங்களது புகைப்படத்தினை அடையாள சான்றாகவும், ஆதார் முகவரிச் சான்றாகவும் பதிவேற்றம் செய்யலாம்.

பெயர், முகவரி, புகைப்பட மாற்ற வேண்டியிருப்பின் உரிய ஆவணங்கள், புகைப்படத்துடன் தொகுதி தாலுகா அலுவலகத்தில் படிவம் 8ல் மனு செய்திடலாம். திருத்தம் தொடர்பாக தகவல்களை பெறவும், ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் கலெக்டர் அலுவலக வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் 0461-1950ல் தொடர்பு கொள்ளலாம். தாலுகா, ஆர்டிஓ அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.இதில், கூடுதல் கலெக்டர் விஷ்ணுசந்திரன், சப்-கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் காலோன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, தேர்தல் தாசில்தார் ரகு, கீதாஜீவன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் பஞ்.தலைவர் இளையராஜா, கிருபாகரன், சந்தானம்(அதிமுக), முரளிதரன்(காங்கிரஸ்), கனகராஜ்(பாஜ), மார்க்சிஸ்ட் அர்ச்சுனன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: