கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கோரி கொம்பாடி கிராமமக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை

மதுரை, ஜன.21:மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே உள்ள கொம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய்க்கு நிலையூர், கம்பிக்குடி விரிவாக்க கால்வாய் மூலம் தண்ணீர் விட வேண்டும். கொம்பாடிக்கு தண்ணீர் விட வேண்டும் என பரிந்துரை கடிதம் எழுதிய ஒன்றிய ஆணையர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் தலைமையில் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாசல் முன் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலையில் இருந்து மாலை வரை இந்த போராட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து, டிஆர்ஓ செந்தில்குமாரி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு ஊரக வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: