வாய்க்காலில் இறங்கிய அரசு பேருந்து

புவனகிரி, ஜன. 21:  சேலத்தில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை காட்டுமன்னார்கோவில் ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.நேற்று அதிகாலை புவனகிரி அருகே உள்ள இரட்டைகுளம் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் இறங்கியது. இதில் பஸ் லேசாக சாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கூடுவெளிசாவடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்(53), சீர்காழியைச் சேர்ந்த விஜயகுமார் (38), விழுப்புரத்தைச் சேர்ந்த செழியன் (49) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர். இச்சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ன்றனர்.

Related Stories:

>