தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 ேகாடி மோசடி பைனான்ஸ் நிறுவன உரிமையாளர், 6 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு

புதுச்சேரி, ஜன. 21: புதுவை, தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் ரூ.10 கோடி மோசடி செய்ததாக  பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் 6 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை  வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 புதுச்சேரி,  குமரகுருபள்ளம், அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார்  (45). தொழிலதிபரான இவர் லால்பகதூர் சாஸ்திரி வீதி, புஸ்சி வீதிகளில்  தனியார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தினார். இந்நிறுவனம் பல்வேறு கவர்ச்சி  திட்டங்களை அறிவித்த நிலையில், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த  ஏராளமானோர் அவரிடம் ஆயிரம், லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு  செய்தார்களாம்.  குறுகிய காலத்திலேயே வட்டிச் சலுகையை வழங்கியதால்  கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக  தனித்தனி ஏஜென்சிகளை நியமித்திருந்த நிர்வாகம், வங்கி தங்கள் நிறுவனத்துக்கு பணத்தை பரிமாற்றம் செய்து கொண்டதாக தெரிகிறது.நாளடைவில் பணத்தை திருப்பி கொடுப்பதில் தாமதம் செய்யவே வாடிக்ைகயாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் மாதம்  முதல் இந்நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தொழில் நஷ்டமடைந்ததாக  நீதிமன்றத்தில் சஞ்சீவ்குமார் முறையிடவே, வாடிக்கையாளர்கள்  அதிர்ச்சியடைந்தனர். இந்நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியவரில்  ஒருவரான, முத்துபிள்ளைபாளையம், சண்முகம் நகர், சாய்பாபா வீதியைச் சேர்ந்த  தனியார் ஊழியர் சுரேஷ் (35) என்பவர், இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி காவல்  நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

 அதில், தன்னைபோல் 500  பேரிடம் சுமார் ரூ.10 கோடி வரை பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்த  நிறுவனத்தின் உரிமையாளரான சஞ்சீவ் குமார், அவரது தம்பி பிரகாஷ் குமார்,  தந்தை கௌதம் சந்த், மனைவி அனிதா, மேலாளர்களான லாஸ்பேட்டை,  சாமிபிள்ளைதோட்டம், தவமணி நகரைச் சேர்ந்த திருமுருகன், கிருஷ்ணா நகர்  மணிகண்டன், காசாளரான பொம்மையார்பாளையம் லட்சுமி ஆகியோர் உடந்தையாக  இருந்ததாக

குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து எஸ்பி ராஜசேகர வல்லட்  உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் நியூட்டன் தலைமையிலான போலீசார், தொழிலதிபரான  சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 7 பேர் மீதும் மோசடியில் ஈடுபடுதல் (420)  உள்ளிட்ட 2 பிரிவில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவான  அனைவரையும் தேடி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே எத்தனை பேரிடம்,  எவ்வளவு பணம் மோசடி நடந்துள்ளது   என்ற விபரம் தெரியவரும் என்று சிபிசிஐடி  வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: