×

நாதஸ்வர வித்வான் லாரி மோதி சாவு

பண்ருட்டி, ஜன. 21: உளுந்தூர்பேட்டை அருகே கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரபாண்டியன் (23), நாதஸ்வர வித்வான். இவர் நேற்று தனது சொந்த ஊரில் இருந்து பண்ருட்டி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி அருகே சேமக்கோட்டை என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

Tags : Nataswara Widwan ,Larry Moti Death ,
× RELATED செஞ்சி அருகே சடலத்துடன் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு