இறுதி பட்டியல் வெளியீடு 8 சட்டமன்ற தொகுதிகளில் 23,52,785 வாக்காளர்கள்

திருப்பூர், ஜன.21: திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் நேற்று வெளியிட்டார். இதில் 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 23,52, 785 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து சிறப்பு முகாம் மற்றும் இணைய வழியாக  பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்கள் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஜயகார்த்திகேயன்  நேற்று  வெளியிட்டார். இதில் திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்களர்களாக 11 லட்சத்து 63 ஆயிரத்து 767 பேரும், பெண் வாக்காளர்களாக 11 லட்சத்து 88 ஆயிரத்து 733 பேரும், மூன்றாம் பாலினத்தவர்களாக 285 பேரும் உள்ளனர். மேலும் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 2493 ஆக உள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் நகல்கள் மற்றும் குறுந்தகடுகள் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர், மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

Related Stories: