உரிய தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்

காங்கயம், ஜன. 21:   காங்கயம் கோவை ரோடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.  இது குறித்து பி.ஏ.பி. வெள்ளக்கோவில் நீர் பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது: திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு முறையான தண்ணீர் திறக்கப்படுவதில்லை. தண்ணீர் திறப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். மேலும் தண்ணீர் விற்பனையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு சுற்று தண்ணீர் திறப்பின்போதும் 12 ஆயிரம் ஏக்கருக்கு, ஏழு நாள் அடைப்பு, ஏழு திறப்பு எனும் நிலையில் ஒன்பது சுற்றுக்கள் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், தற்போது படிப்படியாக தண்ணீர் வழங்கும் நாட்களை குறைத்து விட்டனர். மேலும் தண்ணீர் 3 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டருடன் நடந்த பேச்சுவார்த்தையில் தண்ணீர் திறப்பு குறித்து, கலெக்டர்  உத்திரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, தண்ணீர் திறப்பில் மெத்தனப்போக்கோடு செயல்படுகின்றனர், என்றனர்.இதில் காங்கயம், வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் மற்றும் மயில்ரங்கம் பகுதிகளை சேர்ந்த 23 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

பிஏபி பாசன விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2வது நாளாக நேற்று காலை 10 மணி அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தி.மு.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், காங்கேயம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிதம்பரம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து தி.மு.க. தலைமைக்கு தெரிவித்து தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: