×

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு

திருப்பூர்,ஜன.21:திருப்பூர் முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 1987 என்ற எண் கொண்ட புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை கண்டித்தும், மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போது 12 ம் தேதிக்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என நீங்கள் (கலெக்டர்) உத்தரவு கொடுத்துள்ளீர்கள். ஆனால் 13 ம் தேதி வழக்கம் போல் கடை அங்கு நடைபெற்றது. இதனை அறிந்து அப்பகுதி பொதுமக்களாகிய நாங்கள் 13ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் குடோன் மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எங்களிடம் 19ம் தேதி முதல் கடையை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என கூறினர். ஆனால் 19ம் தேதியும் கடையை வழக்கம் போல திறந்து விற்பனை செய்து வருகின்றனர். கலெக்டர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Tasmac ,store ,
× RELATED டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து வழக்கு கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு