தேனி என்.எஸ்.பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தேனி, டிச. 22: தேனி  சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1983ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்தது. இதில் 1983-ம் ஆண்டு படித்த மாணவர்களான தற்போது அரசு துறைகளிலும், வணிகத் துறைகளிலும், தனியார் துறைகளிலும் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பள்ளிப் பருவ அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது 1983ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்த ஆசிரியர்களான துரைராஜ், முருகேசன், பாலு, ராம்தாஸ், சாம்சன்ஜெபராஜ், பழனிச்சாமி, சங்கரப்பன், சுப்புராம், அய்யம்பெருமாள், தனம், ஜெயசிங்சாமுவேல் மற்றும் அலுவலர்களான பாலசுப்ரமணியன், பிரகாஷ், சந்திரபோஸ் ஆகியோரை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.

அப்போது ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும் தேனி மேலப்பட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பொதுச் செயலாளருமான எம்.எம். ஆனந்தவேல், இப்பள்ளியின் செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் திருப்பதி, ஆனந்த், வெங்கடேஷ் ஆகியோர் செய்தனர்.

 

Related Stories: