×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 3 தொகுதிகளில் 5,85,049 வாக்காளர்கள்

ஊட்டி,ஜன.21: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 13 ஆயிரத்து 296 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 753 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல் படி 3 தொகுதிகளிலும் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். நவம்பரில் வெளியான பட்டியலை காட்டிலும் இறுதி பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.32 சதவீதம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் விவரம்: ஊட்டி தொகுதி (108): 98 ஆயிரத்து 353 ஆண்களும், 1 லட்சத்து 06 ஆயிரத்து 775 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 05 ஆயிரத்து 138 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.


Tags : voters ,constituencies ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...