இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து குன்னூரில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டம்

குன்னூர்,ஜன.21: நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் புதிய வாக்காளர் எண்ணிக்கை 2.32 சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. குன்னூர் சப்.கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  கருணாகரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில்  மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா  மற்றும் கூடலூர், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில்  தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களுடன் மூன்றாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2,81,762 பேரும், பெண் வாக்காளர்கள் 3,03,270 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 பேர் உள்ளனர். இறுதி பட்டியலில் புதிய வாக்காளர் எண்ணிக்கை 2.32 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: