இங்கிலாந்தில் இருந்து நீலகிரி வந்தவர்களில் 2 பேர் வீரியமிக்க கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர்

ஊட்டி,ஜன.21: இங்கிலாந்தில் மரபியல் மாற்றம் கொண்ட வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  இங்கிலாந்தில் இருந்து நீலகிரிக்கு வந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டதில் 14 பேர் நீலகிரிக்கு வந்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் மாதிரிகள் எடுத்து பரிசோதித்ததில் 3 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு வீரியமிக்க தொற்றா என்பதை கண்டறியும் பொருட்டு அவர்களுடைய மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வராத நிலையில், இவர்களை மீண்டும் பரிசோதித்ததில் இருவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இது குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்: இங்கிலாந்தில் இருந்து நீலகிரி வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் 5 பேரில் 2 பேருக்கு தொற்று பாதிப்பு குணமடைந்துள்ளது. இவர்களுக்கு வீரியமிக்க தொற்றுள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் புனேவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இன்னும் முடிவுகள் வரவில்லை. இதனால் இவர்களுக்கு வீரியமிக்க தொற்று பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>