×

6 மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக் கடைக்கு பூட்டு

கோவை, ஜன.21:  கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வணிக  வளாகங்களில் நூற்றுக்கணக்கான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 6  மாதங்களுக்கான வாடகைத் தொகை வைப்புத்தொகையாக பெறப்பட்டு வியாபாரிகளுக்கு  கடைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்நிலையில், பல மாதங்களாக வாடகை  செலுத்தாத கடைகளின் வைப்புத்தொகையில் வாடகை கழிக்கப்பட்டு,  வைப்புத்தொகை முழுவதும் கழிக்கப்பட்டவுடன், அதன் பிறகும் வாடகை செலுத்தாத  கடைகள் காலி செய்யப்பட்டு,  மாநகராட்சியால் பூட்டப்படுகின்றன.  அதன்படி,  கோவை மத்திய மண்டலம், 51வது வார்டுக்கு உள்பட்ட படேல் சாலை பகுதியில் 6  மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரும்புக்கடைக்கு  மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ்  கனகராஜ், உதவி வருவாய் அலுவலர் ஆனந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா ஊரடங்கால் டீக்கடை அடைப்பு...