476 கிலோ குட்கா பறிமுதல்

கோவை, ஜன.21:  கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் உக்கடம் போலீசார் நேற்று காலை அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது லாரி புக்கிங் அலுவலகம் ஒன்றில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. 24 மூட்டைகளில் 476 கிலோ அளவிற்கு குட்கா, பான்பராக், பான் மசாலா பொருட்கள் இருந்தது. விசாரணையில் கோவை நகரை சேர்ந்த அப்பாஸ் (38), ஜெய்லாவுதீன் (56) ஆகியோர் கர்நாடகாவில் இருந்து இந்த பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கியது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>