ஜன.28ல் இறைச்சி கடைகள் இயங்காது

கோவை, ஜன.21: மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜன.28ம் தேதி வள்ளலார் தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் இயங்காது. அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவை மனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, துடியலூரில் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவைமனைகள் மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories:

>