8 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்டத்தில் 19.57 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 19 லட்சத்து 57 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.   தேர்தல்  ஆணையம் உத்தரவின் படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஈரோடு  கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கதிரவன் வெளியிட  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.  இறுதி வாக்காளர் பட்டியல்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண்  வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15  ஆயிரத்து 987, மூன்றாம் பாலினம் 15 பேர் உள்பட மொத்தம் 2 லட்சத்து 26  ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மேற்கு தொகுதியில் ஆண்கள் 1  லட்சத்து 42 ஆயிரத்து 913 வாக்காளர்களும், பெண்கள் 1 லட்சத்து 48 ஆயிரத்து  393 வாக்காளர்களும், மூன்றாம் பாலினம் 30 வாக்காளர்கள் என 2 லட்சத்து 91  ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். மொடக்குறிச்சி தொகுதியில் ஆண்கள் 1  லட்சத்து 13 ஆயிரத்து 952, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 493,  மூன்றாம் பாலினம் 12 என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 457 வாக்காளர்கள்  உள்ளனர். பெருந்துறை தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 325 ஆண்  வாக்காளர்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 067 பெண் வாக்காளர்களும், 6  மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 27 ஆயிரத்து 398 வாக்காளர்கள் உள்ளனர்.  

   பவானி தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 231 ஆண் வாக்காளர்களும், 1  லட்சத்து 22 ஆயிரத்து 291 பெண் வாக்காளர்கள், 9 மூன்றாம் பாலினத்தவர் என  மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 531 வாக்காளர்கள் உள்ளனர். அந்தியூர்  தொகுதியில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 712 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11  ஆயிரத்து 215 பெண் வாக்காளர்கள் 18 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து  18 ஆயிரத்து 945 வாக்காளர்கள் உள்ளனர். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1  லட்சத்து 22 ஆயிரத்து 945 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 551  பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர் என 2 லட்சத்து 55  ஆயிரத்து 502 வாக்காளர்களும், பவானிசாகர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 26  ஆயிரத்து 755 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 355 பெண்  வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2 லட்சத்து 51 ஆயிரத்து  118 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் ஆண்  வாக்காளர்கள் 9 லட்சத்து 53 ஆயிரத்து 767 பேரும், 10 லட்சத்து 3 ஆயிரத்து  332 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 104 பேர் உள்ளனர்.  மொத்தம் 19 லட்சத்து 57 ஆயிரத்து 203 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 278  படைநல வாக்காளர்கள் உள்ளனர். புதியதாக வாக்காளர் பட்டியலில் 58 ஆயிரத்து  620 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 948 வாக்காளர்கள் பல்வேறு  காரணங்களால் நீக்கப்பட்டுள்ளனர்.     கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி  வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கும், நேற்று வெளியிடப்பட்ட இறுதி  வாக்காளர் பட்டியலுக்கும் இடையே கணக்கீடும் போது கூடுதலாக 40,672 பேர் சோ்க்கப்பட்டுள்ளனர். இதேபோல  மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 49  ஆயிரத்து 565 கூடுதலாக உள்ளதாக கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories: