×

மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் தரம் உயர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 6 பள்ளிகள் தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில்  50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 40  உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி ஒன்றியம்,  குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஈரோடு  பெரியவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை உயர்நிலைப்பள்ளிகளாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல அந்தியூர் ஒன்றியம், ஓசூர் உயர்நிலைப்பள்ளி,  தாளவாடி ஒன்றியம், கோட்டமாளம் உயர்நிலைப்பள்ளி, ஈரோடு ஒன்றியம்,  நஞ்சப்பகவுண்டன்வலசு உயர்நிலைப்பள்ளி, பவானி ஒன்றியம், ஓடத்துறை  உயர்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்  பணியிடங்களை பணி நிரவல்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : government schools ,district ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை:...