ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 13 பைக்குகள் இன்று ஏலம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 13 டூவீலர்கள், ஈரோடு எஸ்பி. அலுவலகத்தின் பின்புறம் உள்ள மதுவிலக்கு டி.எஸ்பி. அலுவலகம் முன் இன்று (21ம் தேதி) பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோர் 13 டூ வீலர்களையும் நேற்று பார்வையிட்டு சென்றனர். ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் ஏலம் விட மதுவிலக்கு போலீசார் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நிர்வாக பிரச்னை காரணமாக நான்கு சக்கர வாகனம் ஏலத்துக்கு வைக்கப்படவில்லை.

Related Stories:

>