×

மீனவர்கள் சாலை மறியல்

சென்னை: நொச்சிக்குப்பம் மீனவர்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் சார்பில், சாந்தோம் சர்ச் பின்புறம் 1,188 குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் டும்மிங்குப்பம் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் திரண்டு வந்து, ‘‘எங்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பை எங்களுக்கு தான் வழங்க வேண்டும். வேறு நபர்களை எங்கள் பகுதியில் குடியமர்த்த கூடாது’’ என்று கூறி திடீரென நொச்சிக்குப்பம் லூப் சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மயிலாப்பூர் துணை கமிஷனர் மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் அருகே குவாரியால்...