×

கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது

குன்றத்தூர்: முகலிவாக்கத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம்(55). கேபிள் டிவி ஆபரேட்டர். நேற்று முன்தினம் தனது மகன் தானேஷ்வரனுடன் பைக்கில் மதனந்தபுரம் அருகே சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் பொன்னுரங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.  தானேஷ்வரன் பலத்த வெட்டு காயத்துடன்  மருத்துவமனையில்  சிகிச்சை பெறுகிறார். புகாரின்பேரில் மாங்காடு போலீசார் நேற்று பூந்தமல்லியை சேர்ந்த யாசிம்(45), சதாம் உசேன்(25), உமர் பாஷா(31), காதர் பாஷா(48), விக்னேஷ்வரன்(23), முனுசாமி(20),  காலா(23), சுரேஷ்(24),  அனீபா(28) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : cable TV operator ,
× RELATED கேபிள் டிவி ஆபரேட்டர் கொலையில் 9 பேர் கைது