மாநகரில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர், ஜன. 20:  திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர்  மாநகராட்சி மூன்றாவது குடிநீர் திட்டத்தின் தலைமை நிரேற்று நிலையத்தின்  மின் பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்தினரால்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின்தடை காரணமாக  குடிநீர் இறைப்பு பணிகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் மாநகரில்  இத்திட்டத்தில் பெறப்படும் குடிநீர் தடைபட்டுள்ளதால் பகிர்மானத்தில் 19ம்  தேதி (நேற்று) 20ம் தேதி (இன்று) ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் செய்ய  இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பகிர்மானத்தில் குடிநீர் சீரான கால  இடைவெளியில் விநியோகிக்க இயலாது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து  சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>