சாக்கடை கழிவு நீரால் சுகாதாரசீர் கேடு

திருப்பூர்,  ஜன. 20:  திருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் பா.ஜ.வை சேர்ந்த  நடராஜன், கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் அளித்துள்ள மனு:

திருப்பூர்  மாநகராட்சி 11வது வார்டுக்கு உட்பட்ட செல்லம்மாள் காலனி அரிசிக்கடை வீதி,  திருநீலகண்டர் வீதி, நாகாத்தாள் கோவில் வீதி, பாலதண்டாயுதபாணி வீதி,  ஈ.பி.காலனி 50 அடி ரோடு, முருங்கைத் தோட்டம் வீதி, எஸ்.ஆர்.பேக்கரி எதிரில்  உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கழிவு நீர் வடிகால்களில் சுமார் 20 அடி வரை  மண் தேங்கி உள்ளதால் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதேபோல்  பல இடங்களில சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி  சாலைகளில் ஓடுகிறது. தற்போது மழை காலம் என்பதால் நோய் பரவும் நிலை உள்ளது.  மேலும் குடிநீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்யப்படுகிறது.  இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Related Stories: