விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க ஊட்டி நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி, ஜன. 20:  மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அணில்காமி. இவர் இத்தலார் ஜேபிஆர்., அக்ரோ பார்மில் உதவியாளராக பணியாற்றினார். கடந்த செப்டம்பர் 4ம் தேதி நடந்த விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இழப்பீடு கோரி குன்னூர் தொழிலாளர் இணை அதிகாரியிடம் அவரது உறவினர்கள் சார்பில் மனு தாக்கல் செயயப்பட்டது.

இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மக்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து சமரம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட அணில்காமி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இறப்பீடாக வழங்க நீதிபதி தரன் உத்தரவிட்டார். இதற்கான காசோலையை அணில்காமியின் மனைவி மற்றும் இரு மகன்கள் பெற்றுக் கொண்டனர்.

Related Stories:

>