அணைகள் நிரம்பியுள்ளதால் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது

ஊட்டி, ஜன. 20: நீலகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்தால், அந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை.

குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும், டிசம்பர் மாதம் முதல் பனி பொழிவு மற்றும் வெயில் காரணமாக கோடையில் அனைத்து அணைகளிலும் தண்ணீர் குறைந்து ஊட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருவது வாடிக்கை.

ஆனால், இம்முறை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இம்மாதம் துவக்கம் வரை நீலகிரியில் ஓரளவு பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், நீலகிரியில் உள்ள முக்கிய அணைகள், மின் உற்பத்திக்காக பயன்படும் அணைகள் மற்றும் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பயன்படும் அனைத்து அணைகளும் நிரம்பியே காணப்படுகின்றன. குறிப்பாக, ஊட்டி நகரின் பல்வேறு  பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய பயன்படும் பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில் மற்றும் மார்லிமந்து உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், இம்முறை கோடை சீசனின் போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

Related Stories:

>