சோமனூரில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

சோமனூர், ஜன.20: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சோமனூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. இதை சூலூர் எம்.எல்.ஏ: கந்தசாமி வழங்கினார்.தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் 173 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் மாணவர்கள் சைக்கிள்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர் .இதில், கருமத்தம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம், முத்துகவுண்டன்புதூர் ஊராட்சி தலைவர் கந்தவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டன

Related Stories:

>