ஈரோட்டில் கொரோனாவுக்கு 75 வயது முதியவர் பலி

ஈரோடு, ஜன. 20:   ஈரோடு மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,117 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 13,829 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 140 பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 147 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 17ம் தேதி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>