பொங்கல் விற்பனை நிறைவடைந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்

ஈரோடு, ஜன. 20: பொங்கல் பண்டிகை விற்பனை கடந்த வாரத்தோடு நிறைவடைந்ததையடுத்து நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என கடந்த 3 மாதங்களாக வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. கொரோனா தாக்கத்திற்கு மத்தியிலும் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு ஜவுளிகளை வாங்கி சென்றனர். இந்நிலையில் கடந்த வாரத்துடன் பொங்கல் வியாபாரம் முடிவடைந்ததையடுத்து நேற்று நடந்த ஜவுளி சந்தையில் 25 சதவீதத்திற்கும் குறைவான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. மேலும் வெளி மாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள், பொதுமக்களும் கலந்து கொள்ளாததால் ஜவுளி சந்தை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்னும் 2 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும், அடுத்த மாதத்தில் இருந்து உள்ளூர் கோயில் திருவிழா சீசன் விற்பனை தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: