விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சர்வர் பிரச்னையால் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் பொதுமக்கள் அலைக்கழிப்பு

விருதுநகர், ஜன. 20:ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகளை தவிர்க்க, தமிழகம் முழுவதும் கைரேகை பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கும் பயோமெட்ரிக் முறை கடந்த 2020 அக்.1ல் நடைமுறைக்கு வந்தது.  இதில் பிஓஎஸ் மெஷினில் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து, பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து ஓகே, ஆனால் மட்டுமே ரேசன் பொருட்களை வழங்க முடியும். ஆனால், சர்வர் பிரச்சனை காரணமாக பயோ மெட்ரிக் முறை 2020 அக்.13ல் நிறுத்தப்பட்டது. சர்வர் பிரச்சனையை சரி செய்ய முடியாமல் போனதால் 2020 நவ. மாத பொருட்களை பழைய முறைப்படி ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து வழங்கினார். அதன்பின் 2020 டிச.12ல் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ரேசனில் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் விநியோகம் காரணமாக ஜன.4 முதல் ஜன.13 வரை பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டு, கார்டுகளை ஸ்கேன் செய்து பொங்கல் பரிசு வழங்கினர். பொங்கல் பரிசு, பொருட்கள் விநியோகம் காரணமாக ஜன. மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யவில்லை. இந்நிலையில் ஜன.14 முதல் 17 வரை விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜன.18 முதல் மறுபடியும் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 963 ரேஷன் கடைகளில் உள்ள 5.76 லட்சம் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.

நேற்று சர்வர் பிரச்னை காரணமாக பொருட்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க 20 முதல் 30 நிமிடம் பிடித்தது. தினசரி 120 முதல் 150 கார்டுதாரர்களுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்க வேண்டிய நிலையில் நேற்று 30க்கும் குறைவானவர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்க முடிந்தது. 80 சதவீதம் பேருக்கு பொருட்கள் வழங்காமல் இருக்கும் நிலையில், சர்வர் பிரச்சனையால் சிக்கல் எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் கார்தாரர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. சர்வர் பிரச்சனை முழுமையாக சரி செய்யாமல் பயோமெட்ரிக் முறையை நடைமுறை படுத்துவதால் கார்டுதாரர்களும், கடை ஊழியர்களும்  சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>