விருதுநகர் மாவட்டத்தில் கோயில் திருப்பணிகளுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சிவகாசி, ஜன. 20:  விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோயில் திருப்பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி  நன்கொடை வழங்கி வருகிறார். இந்நிலையில் திருத்தங்கல் புதிய பஸ்ஸ்டாண்டு அருகே கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு ரூ.5 லட்சம்,  விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோயில் பணிக்கு ரூ.1 லட்சம்,  திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் இந்து நாடார் உறவினர்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு ரூ.25 ஆயிரம், வத்ராயிருப்பு அருகே சுந்தரபாண்டியன் கிராமம் சாலிபர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட  குஞ்சுமாடசாமி கோயில் கும்பாபிஷேக விழா பணிக்கு ரூ.25 ஆயிரம்,  சாத்தூர் அருகே முத்தாண்டிபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு ரூ.25 ஆயிரம், ராஜபாளையம் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டப கட்டுமான பணிக்கு ரூ.3 லட்சம் என நேற்று மட்டும் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். இதில்

கோயில் நிர்வாகிகள், ராமர், பாக்கியராஜ், நாட்டாமை குருசாமி, திருத்தங்கல் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீனிவாசபெருமாள், ராஜபாளையம் நகர செயலாளர் ரானா பாஸ்கரராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>