ஒரு கிமீ தூரம் குட்டிக்கரணம் 5ம் வகுப்பு மாணவர் சாதனை

வத்திராயிருப்பு, ஜன. 20:விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கிழவன்கோவிலைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். மனைவி சித்ரா. மகன் சந்தோஷ் (9). ஐந்தாம் வகுப்பு மாணவர். சிறுவயது முதல் குட்டிக்கரணம் அடிப்பதில், சந்தோஷ்க்கு அதிக ஈடுபாடு இருந்தது. கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு கி.மீ தூரம் குட்டிக்கரணம் அடிக்கும் சாதனை நிகழ்ச்சியை ஆஸ்கர் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில், சிறுவன் சந்தோஷ் இடைவிடாமல் ஒரு கி.மீ தூரத்திற்கு குட்டிக்கரணம் அடித்து சாதனை நிகழ்த்தினார். இதைப் பாராட்டி, ஆஸ்கர் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் சந்தோஷூக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கியது. கிராம மக்களும் சிறுவனின் சாதனையை பாராட்டினர்.

Related Stories: